/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sandi.jpg)
தொலைக்காட்சி நடன நிகழ்ச்சிகளின் மூலம் பலருக்கும் பரிச்சயமானவரான சாண்டி மாஸ்டர்,தற்போது திரைப்படங்களில் நடன இயக்குநராகப் பணிபுரிந்து வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுபிரபலமான அவருக்கு பட வாய்ப்புகள்குவிந்து வருகிறது.
இதனைத்தொடர்ந்து திரைத்துறையில் நடிகராக அறிமுகமாகவுள்ள சாண்டி மாஸ்டர் இயக்குநர் சந்துரு இயக்கும் 3:33 படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் இயக்குநர் கெளதம் மேனன், ரேஷ்மா, ரமா ஸ்ருதி, மைம் கோபி ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்கில் நடிக்கின்றனர். டி ஜீவிதா தயாரிக்கும் இப்படத்திற்கு ஹர்ஷ்வர்தன் ரமேஷ்வர் இசையமைத்துள்ளார்.காலத்தின் ஒரு குறிப்பிட்ட நேரத்தை, மையமாகக் கொண்டு வித்தியாசமான கதைக்களத்தில், பாடல்கள் இல்லாத, புதுமையான ஹாரர் திரில்லர் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது.
சமீபத்தில் வெளியான படத்தின் ட்ரைலர், ஸ்னீக்பீக் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் '3:33' திரைப்படம் டிசம்பர் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)